கொரோனா: எகிறும் பாதிப்புகளால் திணறும் உலக சமூகம்

0 1378
கொரோனா: எகிறும் பாதிப்புகளால் திணறும் உலக சமூகம்

கொரோனாவால் உலகம் முழுவதும் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகின் ஒரு மூலையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டால், மற்றொரு மூலையில், உயிரி ழப்புகளும் பாதிப்புகளும் கணிசமாக உயர்ந்து, ஒவ்வொரு நாளும் மக்கள், அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

அமெரிக்காவில், வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி விட்டது. அங்கு, உயிர்ப்பலி 78 ஆயிரத்தை தாண்டி விட்டது.இங்கிலாந்தில் உயிரிழப்பு 31 ஆயிரத்தைத் தாண்ட, இத்தாலியில் உயிர்ப்பலி 30 ஆயிரத்தை கடந்து உள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 262 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு 2 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 229 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது.பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பெல்ஜியத்தில் ஒரே நாளில் 106 பேர் இறந்ததால், உயிரிழப்பு 8 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.ஜெர்மனியில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட, உயிர்ப்பலி 7 ஆயிரத்து 500 - ஐ நெருங்கி உள்ளது.ஈரானில் ஒரே நாளில், 66 பேர் பலி ஆனதால், கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.

நெதர்லாந்தில் உயிர் பலி 5 ஆயிரத்து 359 ஆக உயர, சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே ஒருவர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். கனடா, துருக்கி, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலும் கொரோனா, தனது கோர முகத்தை காட்டி உள்ளது.

ரஷியாவை பொறுத்தவரை, 6- வது நாளாக 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால்பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 699 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 76 ஆயிரத்தை கடக்க, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டி விட்டது.
சுமார் 49 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 13 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments