காவல் உதவி ஆணையர், காவல் ஆணையரக உதவி ஆய்வாளர் உள்பட 8 பேருக்கு கொரோனா

0 1008
சென்னையில் கோயம்பேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர், காவல் ஆணையரக உதவி ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆணையர், காவல் ஆணையரக உதவி ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண் உதவி ஆய்வாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால்,   காவல் ஆணையர் அலுவலகத்தில் நன்னடத்தை சான்று வழங்கும் அலுவலகம் மூடப்பட்டது. இதே போல சென்னை கிழக்கு கட்டுப்பாட்டு அறையில் வாக்கி டாக்கி மைக் ஆப்ரேட்டரான காவலர் ஒருவருக்கும் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கோர்செல் செக்யூரிட்டி உதவி ஆய்வாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், டி.பி.சத்திரம் காவலர் குடியிருப்பில் ஒருவர், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர், மாம்பலம் காவலர் குடியிருப்பில் ஒருவர் என காவல் துறையில் இன்று மட்டும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் துறையில் இதுவரை 67 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments