கொரோனா ஒழிப்பில் தமிழகமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் அழைப்பு

0 1408
கொரோனாவை ஒழிக்கும் பணியில், ஒத்துழைப்பு அளிக்க வேண்டு மென தமிழகமக்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாவை ஒழிக்கும் பணியில், ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென தமிழகமக்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை - தலைமைச் செயலகத்தில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே, வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை கண்டு, யாரும் அச்சப் பட தேவை இல்லை என்று கூறிய அவர், தற்போது எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

பிற மாநி லங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் கொரோனா உயிரிழப்பு மிகவும் குறைவு என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments