மகாராஷ்டிரத்தில் பல்கலை. இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்குச் செல்வர்- உயர்கல்வி அமைச்சர்

0 964

மகாராஷ்டிரத்தில் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புக்குச் செல்வார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குக் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 17 வரையுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் உதய் சமந்த், பேஸ்புக் வழியாகப் பல்கலைக்கழக மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும், தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 14ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments