ஆஸ்திரேலியாவில் 3 கட்டங்களாக ஊரடங்கை தளர்த்த திட்டம்

0 983

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், 3 கட்டங்களாக ஊரடங்கை தளர்த்த திட்டமிட்டுள்ளார்.

முதல் கட்டமாக, திருமணங்கள் மற்றும் வழிபாடுகளில் 10 நபர்களும், இறுதி சடங்குகளில் 20 நபர்களும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியுள்ள அந்நாட்டு அரசு, முடி திருத்தும் கடைகளில், வாடிக்கையாளர்களின் தொடர்பு விவரங்களை சேகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

முதல் கட்டத்தின் போது, பொது நிகழ்வுகளில் மக்கள் கூட அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை, இரட்டிப்பாக்க, இரண்டாம் கட்ட தளர்வில் திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக, திரையரங்குகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை திறக்கப்பட உள்ளன. இந்த 3 கட்டங்களையும் வெற்றிகரமாக கடந்தால், ஜூலையில், இயல்பு நிலைக்கு திரும்பலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments