திருமணம், மருத்துவம், இறப்பு நிகழ்ச்சிக்குச் செல்வோருக்கு உடனடியாக அனுமதி வழங்குவது பற்றிப் பரிசீலிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3280

துக்க நிகழ்ச்சி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வெளியூர் செல்ல அனுமதி கோருபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்குவது பற்றிப் பரிசீலிக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

திருமணம், இறுதிச் சடங்கு, மருத்துவம் ஆகியவற்றுக்கு வெளியூர் செல்பவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு மின்னணு முறையில் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

அனுமதிச் சீட்டு வழங்கும் கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுவதால், அவசரக் காலப் பயணங்களுக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உடனடியாக அனுமதிச் சீட்டு வழங்கப் பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாகப் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments