ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழப்பு

0 639

இன்று அதிகாலை ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

22 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவையில் 5.9 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே கிழக்குப் பகுதியில் உள்ள தமாவாண்ட் (Damavand) நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெஹ்ரானிலும் உணரப்பட்டது.

இதனால் பீதியடைந்த டெஹ்ரான் மக்கள் இரவு நேரத்தில் அலறி அடித்துக் கொண்டு நகர வீதிகளில் குவிந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றான ஈரானில் இந்த முறை பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments