தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.536 அதிகரிப்பு

0 2732

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ள போதிலும், ஆன்லைனில் தங்கம், வெள்ளி நகைகளை முன்பதிவு செய்து சிலர் வாங்கி வருகின்றனர். இதனால் அதற்கான விலையும் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 382 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் இன்று 67 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 449 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 35 ஆயிரத்து 56 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை இன்று 536 ரூபாய் உயர்ந்து, 35 ஆயிரத்து 592 ரூபாயாக உள்ளது.

நேற்று கிலோ வெள்ளி 41 ஆயிரத்து 750 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 750 ரூபாய் உயர்ந்து, 42 ஆயிரத்து 500 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments