சீனாவில் குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி என தகவல்

0 4355
குரங்குகளை வைத்து நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனை வெற்றி

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை குரங்குகள் மீது சீனா வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெய்ஜிங்கை சேர்ந்த சினோவாக் பயோடெக் நிறுவனம், பிக்கோவேக் (PiCoVacc) என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஆய்வு நிலையில் உள்ள இந்த தடுப்பு மருந்தை செம்முகக் குரங்குகளுக்கு (rhesus macaques) கொடுத்து பரிசோதித்துள்ளனர்.

முடக்கப்பட்ட வைரஸை குரங்குகளின் உடலில் செலுத்தி, நோய் எதிர்ப்பு புரதங்களை உருவாகச் செய்துள்ளனர். 3 வாரங்கள் கழித்து குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படச் செய்து அதன் பிறகு, அவற்றை பரிசோதித்துள்ளனர்.

தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட குரங்குகளின் நுரையீரலில் கொரோனா வைரஸ் இல்லை. தடுப்பு மருந்து கொடுக்கப்படாத குரங்குகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, தீவிர நிமோனியா பாதிப்பு இருந்துள்ளது. இதன் மூலம், குரங்குகள் மீது நடத்தப்பட்ட தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தடுப்பு மருந்து மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

சீனாவில் சினோஃபார்ம் நிறுவனத்தின் மற்றொரு தடுப்பு மருந்தும் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments