நோட்டு குறிப்புகள், செய்திகளை காப்பி செய்து கணினியில் ஒட்டும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்

0 2217

கூகுள் லென்ஸ் மூலம் நோட்டு புத்தகங்களில் உள்ள குறிப்புகள், படிக்கும் செய்திகளை எளிதாக காப்பி செய்து கணினியில் ஒட்டுவதற்கான வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் ஆன்ராய்டு செல்போனில் அப்டேட் செய்யப்பட்ட கூகுள் குரோம் மற்றும் கூகுள் லென்ஸ் பயன்பாட்டை வைத்திருக்க வேண்டும்.

மேலும், கணினி மற்றும் செல்போனில், ஒரே கூகுள் கணக்கை வைத்திருக்க வேண்டும். அதன் பின்னர், நோட்டு குறிப்புகள் அல்லது செய்திகளை செல்போனின் கூகுள் லென்ஸ் வழியாக படம்பிடித்து அதில் தேவையான வார்த்தைகளை தேர்வு செய்யவேண்டும். இதையடுத்து காப்பி டூ கம்யூட்டர் என்ற பொத்தானை தேர்வு செய்து கணினியில் பேஸ்ட் செய்துக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments