ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்காவின் விஸ்டா நிறுவனம் முதலீடு

0 2205
ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்காவின் விஸ்டா நிறுவனம் முதலீடு

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.

ஏப்ரல் 22ஆம் தேதி பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 10 விழுக்காடு பங்குகளை 42 ஆயிரத்து 957 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதாக அறிவித்தது. மே ஐந்தாம் தேதி அமெரிக்க முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் ஐயாயிரத்து 656 கோடி ரூபாய் கொடுத்து ரிலையன்ஸ் ஜியோவின் ஒன்று புள்ளி ஒன்று ஐந்து விழுக்காடு பங்குகளை வாங்குவதாக அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் நிறுவனம் 11 ஆயிரத்து 367 கோடி ரூபாய் கொடுத்து இரண்டு புள்ளி மூன்று இரண்டு விழுக்காடு பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது. 3 வாரக் காலத்துக்குள் ரிலையன்ஸ் ஜியோவில் அமெரிக்காவின் 3 நிறுவனங்கள் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் ஜியோவில் மொத்தம் 60 ஆயிரத்து 596 கோடி ரூபாய் முதலீடு செய்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments