இந்தியாவில் கொரோனா பாதிப்பு 56,000ஐ தாண்டியது

0 1332

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை 800ஐ கடந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 16 ஆயிரத்து 540 பேர் குணமாகியுள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் அந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடி உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 390 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 886ஆகவும் உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 16 ஆயிரத்து 540 பேர் இதுவரை சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், குஜராத் 2ம் இடத்திலும், டெல்லி 3ம் இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 974ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது.

2ம் இடத்திலுள்ள குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 12ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 425ஆக அதிகரித்துள்ளது. 3ம் இடத்திலுள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 980ஆகவும், பலி எண்ணிக்கை 66ஆகவும் உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 16 ஆயிரத்து 540பேர் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 3 ஆயிரத்து 301 பேர் குணமாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதற்கு அடுத்து டெல்லியில் ஆயிரத்து 931 பேரும், குஜராத்தில் ஆயிரத்து 709 பேரும் குணமாகியுள்ளனர்.((gfx 3out))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments