ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 2 விமானங்கள் இந்தியா வருகை...

0 6162
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 2 விமானங்கள் இந்தியா வருகை...

ஊரடங்கால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள், கப்பல்கள் மூலம் ஏராளமான இந்தியர்கள் இன்று தாயகம் திரும்ப உள்ளனர்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் விமான சேவை உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து முடங்கியதால், ஊரடங்கிற்கு முன்பாக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

இதைதொடர்ந்து, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகம் அழைத்து வர மத்திய அரசு முடிவெடுத்தது. அதன் படி அபுதாபியில் இருந்து இயக்கப்பட்ட ஏர் இந்திய நிறுவனத்தின் இரு விமானங்கள் மூலம், முதற்கட்டமாக நேற்று இரவு 363 இந்தியர்கள் கேரளாவை வந்தடைந்தனர்.

இதைதொடர்ந்து, இன்று துபாயில் இருந்து தலா 200 பயணிகளுடன் புறப்படும் இரு விமானங்களில் ஒன்று இரவு 9.10 மணியளவிலும், மற்றொரு விமானம் நள்ளிரவு 12.55 மணிக்கும் சென்னையை வந்தடைய உள்ளது.

இதேபோன்று , நேற்று இரவு ஒரே ஒரு பயணியுடன் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் 243 இந்தியர்களுடன் இன்று காலை 11.30 மணியளவில் டெல்லிக்கு திரும்புகிறது. அதைதொடர்ந்து, பிற்பகல் 1 மணி அளவில் வங்கதேசத்தின் தாக்காவில் இருந்து புறப்படும் மற்றொரு விமானத்தின் மூலம் 167 பயணிகள் டெல்லியை வந்தடைய உள்ளனர்.

இதனிடையே, மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்றுள்ள இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் ஜலஷ்வா மற்றும் மகர் கப்பல்கள் மூலமும் முதற்கட்டமாக ஆயிரம் பேர் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.

தொடர்ந்து, தாயகம் அழைத்து வரப்படும் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments