2 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி சாலைப் பணிகளை முடிக்க இலக்கு - நிதின் கட்கரி

0 583
அடுத்த இரண்டாண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை முடிக்க இலக்கு குறித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டாண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை முடிக்க இலக்கு குறித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா பரவலால் வாகன உற்பத்தித் தொழில் எதிர்கொண்டுள்ள சிக்கல்களைத் தெரிவித்த உறுப்பினர்கள், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், அடுத்த இரண்டாண்டுகளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைப் பணிகளை முடிக்க இலக்கு குறித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பழைய வாகனங்களைக் கழிப்பதற்கான கொள்கையை விரைவாக இறுதி செய்யும்படி சாலைப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்குத் தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments