வங்கதேசத்தில், 6 போலீசார் கொரோனாவால் பலி

0 1079

வங்கதேசத்தில் இதுவரை 6 காவலர்கள், கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

ஊரடங்கின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை அழைத்து செல்வது உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபட்டு வந்தமையால், அங்கு 1000 க்கும் மேற்பட்ட போலீசார் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர 1200 க்கும் மேற்பட்ட போலீசார் வீடுகளிலும், 1000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வார்டுகளிலும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பலியான காவலர்களின் குடும்பங்களுக்கு, அரசாங்கம் அளிக்கும் நிவாரண நிதி போக, காவல்துறை சார்பில் 9 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments