இந்தியாவில் ஊரடங்கால் ஏப்ரலில் 12.2 கோடிப் பேர் வேலையிழப்பு

0 933
வேலையிழந்தோரில் 75%பேர் சிறு வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள்

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்புக்கான மையம் ஆய்வு செய்துள்ளது. இந்தியாவில் 2019-2020 ஆண்டில் சராசரியாக 40 கோடியே 40 லட்சம் பேர் வேலை செய்து வந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 28 கோடியே 20 லட்சம் பேராக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் ஏப்ரல் மாதத்தில் 12 கோடியே 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். அவர்களில் முக்கால்வாசிப் பேர் சிறு வணிகர்களும், கூலித் தொழிலாளர்களும் ஆவர். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் என்றும், தமிழகத்தில் வேலையின்மை விகிதம் மற்ற மாநிலங்களை விட அதிகம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments