தோனி தனிமையை விரும்புபவர் என்ற கருத்தில் உண்மையில்லை: நெஹ்ரா

0 1465

இந்திய கிரிக்கெட் அணி கேட்பனாக டோனி பதவி வகித்தகாலத்தில், கேப்டனுடைய அறைக்கு எந்நேரத்திலும் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்ததாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2017ம் ஆண்டில் ஓய்வுபெற்றுவிட்ட நெஹ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசுகையில், டோனி தனிமையை விரும்புபவர், யாருடனும் பேச மாட்டார் என்று மக்கள் நினைப்பதாகவும், ஆனால் அது உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.

டோனி கேப்டனாக பதவி வகித்தகாலத்தில், போட்டி முடிந்தபிறகு, இரவு நேரத்திலும் கேப்டனுடைய அறை திறந்தே இருக்கும் எனவும், அந்நேரத்தில் கேப்டனின் அறைக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம், உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதுடன் கிரிக்கெட் குறித்தும் பேசிக் கொண்டிருக்கலாம் என நெஹ்ரா குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments