இந்தியா மீது விஷம பிரச்சாரத்தை அவிழ்த்து விடும் பாகிஸ்தான்

0 9919
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், இப்போது இந்தியா மீதான விஷம பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்கள் உள்ளூர் பிரச்சனை என்றும் அதற்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ள அதன் பிரதமர் இம்ரான் கான், இந்தியா பொய்யான காரணங்களை காட்டி தங்கள் மீது போர் நடவடிக்கையை துவக்க திட்டமிட்டுள்ளதாக டுவிட்டரில் கதை அளந்துள்ளார்.

காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கூறியுள்ள அவர், பாஜக அரசின் கொள்கைகளால் தெற்காசியாவில் அமைதி குலந்து விடும் எனவும் முதலைக் கண்ணீர் வடித்துள்ளார். அதற்கு உலக நாடுகள் தலையிட்டு முடிவு காண வேண்டும் என சாத்தான் வேதம் ஒதுவது போல அவர் கூறியிருப்பது நகைப்புக்குரியது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments