கொரோனா பரவலை தடுப்பதற்காக அமேசான் பழங்குடியின மக்கள் நிதி சேகரிப்பு

0 721

அமேசான் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடையே கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் 9 நாடுகளில் 30 லட்சம் அமேசான் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 33 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில், தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பிராந்திய அரசுகள் தவறி விட்டதாக அமேசான் பழங்குடி மக்களின் ஒருங்கிணைப்புக் குழு குற்றஞ்சாட்டி உள்ளது.

இதன்பொருட்டு தங்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வாங்க அக்குழு நிதி திரட்டி வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments