ஏப்ரல் தொடக்கத்திலிருந்து நாளுக்கு சராசரியாக 80,000 பேர் கொரோனாவால் பாதிப்பு : டெட்ராஸ்

0 546
ஏப்ரல் தொடக்கத்திலிருந்து நாளுக்கு சராசரியாக 80,000 பேர் பாதிப்பு: டெட்ராஸ்

ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து உலகம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக புதிதாக 80 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்புத் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் மாதம் கொரோனா பரவல் குறைவாக இருந்த நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து நோய் பரவல் சராசரியாக நாளுக்கு 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளதாக கூறினார்.

தற்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா,மத்திய தரைக்கடல் பகுதி, அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளில் பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா சிகிச்சையில் கவனம் செலுத்தப்படுவதால் பிற அடிப்படை மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments