இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 ஆயிரத்தை நெருங்குகிறது

0 660

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்து 783ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமானோரின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 267ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று நோயால் நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிப்பும், பலியும் அதிகரித்தபடியே உள்ளது. இதனால் நாட்டில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 952ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 783ஆகவும் உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,561ம், பலி எண்ணிக்கை 89-ம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 35 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 15 ஆயிரத்து 267 பேர் இதுவரை சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 758ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 651ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 625 ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 532ஆகவும், பலி எண்ணிக்கை 65ஆகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 829ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி 35ஆக உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாதிப்பு 2 ஆயிரத்து 998ஆக இருக்கையில், ஆந்திரா,பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம் மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் குணமானோர் எண்ணிக்கையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 94 பேர் குணமாகியுள்ளனர். இதற்கடுத்து, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments