காய்கறி லாரியில் கிராமத்துக்கு போன சென்னை பொண்ணு...! 86 பேரும் திக் திக்..!

0 216450
காய்கறி லாரியில் கிராமத்துக்கு போன சென்னை பொண்ணு...! 86 பேரும் திக் திக்..1

சென்னையில் இருந்து காய்கறி லாரியில் ஏறி தூத்துக்குடி மாவட்டம் ஆதனூர் கிராமத்திற்கு சென்ற பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியான நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 82 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு ரகசிய பயணத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

ஈரோடு மாவட்டம் போல கொரோனா நோயாளிகள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியதால் தூத்துக்குடி மாவட்டமும் புதிதாக கொரோனா நோய் தொற்று இல்லமாவட்டமாக இருந்து வந்தது. நள்ளிரவில் ரகசியமாக மாவட்டத்துக்குள் புகுந்த பெண்ணால் ஊரே கலகலத்து கிடக்குது.

சென்னை மேடவாக்கத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வந்த ((23 வயதுள்ள)) பெண் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆதனூர் கிராமத்திற்கு செல்ல தன்னந்தனியாக புறப்பட்டுள்ளார். கடந்த 29 ந்தேதி மாலையில் கோவில்பட்டியில் இருந்து கோயம்பேட்டிற்கு காய்கறி லோடு இறக்கிவிட்டு திரும்பிய லாரியில் ஏறி ஊருக்கு திரும்பியுள்ளார். அதிகாலை வேளையில் எட்டாயபுரம் பகுதியில் இறங்கிய அவர் தனது சகோதருக்கு போன் செய்து வரவழைத்து ஓட்டபிடாரம் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

இரு தினங்கள் வீட்டுக்குள் இருந்த அந்த பெண் வழக்கம் போல ஊருக்குள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து வந்தது குறித்து கேட்டபோது தான் ஒரு மாதத்திற்கு முன்பே வந்து கோவில்பட்டியில் தங்கி இருந்ததாக கதை அளந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் ஊரை சேர்ந்த ஒருவர், தாசில்தாருக்கு தகவல் தெரிவித்ததால் அதிகாரிகள் மருத்துவ குழுவினரோடு கடந்த 4ந்தேதி ஆதனூர் சென்றனர். அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ரிசல்ட் வரும் வரை தனித்திருக்க அறிவுறுத்திச் சென்றனர்.

6ந்தேதி அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சைக்கு அழைத்து செல்ல முயன்ற போது அந்த பெண் ஆம்புலன்சில் ஏற மறுத்து அடம் பிடித்தார். சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்தால் கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்ததால் வேறு வழியின்றி சிகிச்சைக்கு சம்மதித்து வேனில் ஏறினார்.அந்த பெண் இரு தினங்களாக தொட்டுத்தூக்கி விளையாண்ட 8 மாத குழந்தை முதற்கொண்டு அந்த ஊரை சேர்ந்த 82 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த பெண்ணிடம் சுகாதாரத் துறையினர் நடத்திய விசாரணையில், தான் சென்னையில் இருந்து வந்த லாரியில் கிளீனர் யாருமில்லை என்றும் ஓட்டுனர் மட்டுமே இருந்ததாகவும், அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த லாரி ஓட்டுனரையும் சுகாதாரத் துறையினர் தேடிவருகின்றனர்.

அதே போல சென்னையில் இருந்து சென்ற லாரி ஒன்றில் ஏறி தூத்துக்குடி மாவட்டம ஆழ்வார்திருநகரி அடுத்த மழவராய நத்தம் கிரமத்துக்கு சென்ற இளைஞர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல கடலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து சென்ற சுமைதூக்கும் தொழிலாளர்கள் பலருக்கு கொரோன தொற்று ஏற்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.முன்பெல்லாம் கோயம்பேடுக்கு காய்கறிவாங்கப் போனால் கொசுறாக கொத்தமல்லி கொடுக்கப்பட்டது, தற்போது கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் கொரொனாவை கொசுறா அனுப்பி வைத்திருப்பதாக அதிகாரிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments