பெண்களை ஏமாற்றிய காசியின் கூட்டாளி கைது

0 16308
பெண்களை ஏமாற்றிய காசியின் கூட்டாளி கைது

80 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய காதல் ரோமியோ காசி பெண்களை மிரட்டி பணம் பறித்த ஆடியோ வெளியாகி உள்ள நிலையில், பணம் பறிப்புக்கு உதவிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கணேசபுரத்தை சேர்ந்த காதல் ரோமியோ காசி, 80க்கும் மேற்பட்ட பெண்களை முகநூல் மூலம் பழகி ஏமாற்றி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனை தற்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காசியின் தந்தை தங்கபாண்டியன் தனது மகன் அப்பாவி என்றும் அவனை போலீசார் சுட்டுக்கொல்ல முயற்சிப்பதாகவும் கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் காமுகன் காசி மீது மேலும் இரு பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கூறிஉள்ளது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காசி என்னமாதிரியெல்லம் ஏமாற்றி பேசி மயக்கி, தங்களிடம் மிரட்டி பணம் பறித்தான் என்பதற்கு ஆதாரமான குரல் பதிவுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தன்னிடம் பெண்கள் தாங்களாகவே வந்து பணத்தை கொடுத்து ஏமாந்து சென்றதாக கூட்டாளிகளிடம் காமுகன் காசி தெரிவித்துள்ளான் தான் பாதம் பிஸ்தா சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருப்பதாகவும், பெண்களுக்காக அடுத்தவருடன் சண்டையிட்டு ரத்தம் சிந்தினால் தனக்கு நஷ்டம் என்றும் தெரிவித்துள்ளான்

தன்னிடம் உள்ள பெண்களின் செல் நம்பரை தந்தால் அவர்களை வசியப்படுத்துவது உங்கள் திறமை என்றும் கூட்டாளிகளிடம் காமுகன் காசி சவால் விட்டுள்ளான்.எல்லாவற்றையும் விட தனக்கு எதிராக பல பெண்கள் புகாரளிக்க தயாராகி வருவதை அறிந்த காசி, தனது கூட்டாளிகளிடம் போட்டோ மற்றும் குரல் பதிவு எல்லாம் நீதிமன்றத்தில் ஆதாரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூட்டாளிகளை சமாதானப்படுத்தி உள்ளான்.

இதையடுத்து காசியின் பணம் பறிப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளில் முக்கியமானவனான கல்லூரி மாணவன் டைசன் ஜூனோவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.மேலும் இரு கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் சிக்கினால் காசியின் சேட்டைகள் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காசிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி குற்றபிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மாதர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.இதற்கிடையே காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த காசிக்கு சிறப்பான கவனிப்புடன் விசாரணை தொடர்ந்து நடந்துவருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments