கொரோனாவை ஒழிக்கும் விட்டமின் டி..! முட்டை, பால்பொருள் அவசியம்..!

0 12285

உடலில் விட்டமின் டி சத்து குறைபாடு இருந்தால் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று ஆய்வில் தெரியவந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி, ஆகவே ஆகாது என்று ஒதுக்கப்படும் முட்டையின் மஞ்சள் கரு, சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களில் நிறைந்துள்ள கொரோனாவின் வில்லனான விட்டமின் டி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக மருத்துவர்கள் வேகம் காட்டிவரும் நிலையில் நாளுக்கு நாள் உலகெங்கிலும் கொரோனோவின் பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் மருத்துவர் மோகன் சிறப்பு நீரழிவு மையம் சென்னையில் 1500 பேரிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் சேர்னல் ஆப் நியூட்ரிசியன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உடலில் விட்டமின் டி யை உருவாக்ககூடிய சூரிய ஒளி அதிகம் கிடைக்க கூடிய சென்னையில் 55 சதவீத பேரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்திமிக்க விட்டமின் டி குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே கொரோனா நோய் தொற்று எளிதாக தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அதுவும், சர்க்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் தான் கொரோனா நோய் தொற்றல் அதிகம் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்

குறிப்பாக இத்தகைய நோயாளிகள் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் பாதிப்பில்லை என்றும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் விட்டமின் டி-யை உடலில் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்கட்டப்பட்டுள்ள்து.

பெண்கள் தங்கள் மீது சூரிய ஒளி பட்டுவிடக்கூடாது என்று வெளியில் செல்லும் போது உடல் முழுவதும் துணியால் மூடி செல்வதும், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதும் அவர்களுக்கு விட்டமின் டி குறைவு ஏற்பட முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

தினமும் காலை 11 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை சூரிய ஒளியில் தங்கள் கை, தோள்பட்டை வெயிலில் படும்படி குறைந்த பட்சம் 15 நிமிடம் நின்றாலே உடலில் வழக்கத்தைவிட 18 சதவீதம் அதிகமாக விட்டமின் டி உடலுக்கு கிடைக்கும் என்கிறார் ஓமந்தூரர் அரசு மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்...

உடல் எடை அதிகரித்துவிடும் , அதனால் உணவில் சேர்த்தால் ஆகவே ஆகாது என்றும்., ஒதுக்கும் முட்டையின் மஞ்சள் கருவிலும், பால்பொருளான சீஸ் பாலாடைகட்டி, கிழங்கா மீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் விட்டமின் டி அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அதே நேரத்தில் உடல் எடை அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளதால், உணவு பொருட்களை கட்டுப்பாடுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை உணவே மருந்து, இனி காலை மற்றும் மாலை வெயில் மட்டுமல்ல உச்சி வெயிலும் உடலுக்கு நல்லது என்று சொல்லி வைப்போம்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments