ஆல்கஹால் சானிட்டைசர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

0 3318

ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டைசர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வணிகத்துக்கான இயக்ககம் ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஆல்கஹாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிட்டைசர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டுத் தேவையைக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே முகக்கவசம் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments