2 நாள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

0 977

இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 685 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 65 புள்ளிகள் அதிகரித்து 9270ஆகவும் நிலை கொண்டன. வங்கி, வாகன உற்பத்தி, நிதி, ஐடி, எப்எம்சிஜி நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏற்றமடைந்தன.

ஐடிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக இருக்கும் சுமார் 8 சதவீத பங்குகள் நிதி திரட்டும் விதத்தில் விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 76 காசுகளாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments