கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

0 1033

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து இதுவரை 347 கோடியே 76 லட்சத்து 15 ஆயிரத்து 440 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் நிறுவனங்கள் மக்கள் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து 41 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 882 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி அளித்தவர்கள், சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை வழங்கியவர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்கிய நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments