மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பிறகு என்ன நடக்கும் என மத்திய அரசுக்கு சோனியா கேள்வி

0 2326

மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பின் என்ன நடக்கும் என சோனியாகாந்தியும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி ஆகியோர் காணொலி மூலம் கலந்துரையாடினர். அப்போது பேசிய சோனியா காந்தி, மே 17ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும்? மே 17ஆம் தேதிக்குப் பிறகு எப்படி இருக்கும் என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

எவ்வளவுக் காலத்துக்கு ஊரடங்கை நீட்டிப்பது என்பதைத் தீர்மானிக்க என்ன அளவுகோலை அரசு கையாள்கிறது? எனவும் சோனியா வினவினார். முதலமைச்சர்களிடம் பேசிய மன்மோகன் சிங், மூன்றாம் கட்ட ஊரடங்குக்குப் பின் என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments