மேஜர் அனுஜ்ஜின் சவப்பெட்டியை கண்ணீருடன் பார்க்கும் மனைவி

0 1693

ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் அனுஜ் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அவரது மனைவி கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் காண்போரை உலுக்குவதாக உள்ளது.

ஹன்ட்வாராவில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த கிராம மக்களை மீட்க சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அனுஜ் சூட் மற்றும் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அங்கிருந்து கொண்டு வரப்பட்ட அனுஜ்ஜின் உடல், சண்டீகரில் உள்ள வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டபின் இறுதி சடங்குக்கு எடுத்து செல்லப்பட தயாராக வைக்கப்பட்டிருந்தது.

திருமணமாகி சில மாதங்களே ஆனநிலையில் கணவர் தம்மை நீங்கா துயரில் ஆழ்த்தி விட்டு சென்றதை நினைத்து, சவப்பெட்டி அருகே மனைவி அக்ரிதி கண்ணீருடன் சடலத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அந்த படங்கள், சமூகவலைதளங்களில் வேகமாக தற்போது பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments