ஒரு மாதத்துக்கு பிறகு வீடு திரும்பிய செவிலியருக்கு உற்சாக வரவேற்பு

0 895
ஒரு மாதத்துக்கு பிறகு வீடு திரும்பிய செவிலியருக்கு உற்சாக வரவேற்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வார்டில் பணியாற்றிவிட்டு ஒருமாதத்துக்கு பிறகு வீடு திரும்பிய செவிலியரை அண்டை வீடுகளில் வசிப்போர் பூத்தூவி வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

நாக்பூரை சேர்ந்த ராதிகா விஞ்சுர்கர் என்ற அந்த செவிலியர், அங்குள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா வார்டில் பணியாற்றினார். இதனால் ஒரு மாதகாலமாக அங்கிருந்து வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார். சிகிச்சை பணி முடிந்து தனிமையில் இருந்த அவர், நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அண்டை வீடுகளில் வசிப்போர், பூத்தூவியும், கைதட்டியும் உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல் அவரது குடும்பத்தினர், ராதிகாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments