மும்பையில் மதுக்கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

0 863

மும்பையில் மதுக்கடைகளை திறப்பதற்கான உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

மதுக்கடைகளை திறப்பதாக அறிவித்த அரசு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியதைக் கண்டு அதிர்ந்துவிட்டது. சமூக இடைவெளிகள் சிறிதும் கடைபிடிக்கப்படாத நிலையில் மதுக்கடைகள் மூலம் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் ஆபத்து இருப்பதால் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் இதர கடைகளிலும் கூட்டம் அதிகளவில் இருப்பதால் தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மளிகைப் பொருட்கள், காய்கறி ,பழம் ,பால், மருந்துக் கடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றும் இதர கடைகள் திறக்க அனுமதியில்லை என்றும் மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மும்பையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் மக்கள் சமூக இடைவெளியின்றி திரள்வது பேராபத்தை உண்டாக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments