பிரான்சில் டிசம்பர் 27ஆம் தேதியே தொற்று பரவியது கண்டுபிடிப்பு

0 3818
முதல் கொரோனா தொற்று சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 27ஆம் தேதியே பிரான்சில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

எனவே பல நாடுகளில் நாம் நினைப்பதற்கு முன்பாகவே தொற்று பரவி இருக்கலாம் என்பதால் மாதிரிகளை மறு சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

பிரான்சில் உள்ள அவிசென்னி (Avicenne ) மற்றும் ஜீன் வெர்டியர் (Jean Verdier) மருத்துவமனைகளில் புளூ அறிகுறிகளுடன் வந்த 24 பேரின் மாதிரிகளை மீண்டும் சோதித்ததில், 42 வயது நபருக்கு டிசம்பர் 27 ஆம்தேதியே கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பிரான்சு அரசின் அதிகாரப்பூர்வ முதல் தொற்று அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்னரே அங்கு தொற்று ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments