மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விரைந்தது கடற்படையின் 3 போர்க்கப்பல்கள்

0 501

மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக் கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவர்களைத் திருப்பி அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களை மீட்டு அழைத்துவர இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சர்துள் போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் மகர், ஐஎன்எஸ் ஜலஸ்வா ஆகிய போர்க்கப்பல்கள் மாலத்தீவுகளில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை அங்குள்ள இந்தியர்களை அழைத்துக் கொண்டு கொச்சிக்குத் திரும்பி வரும் எனப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments