தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

0 781

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் காரணமாக, மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக கூடும் என்பதால், மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments