சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம்

0 1374

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் தொழில் தொடங்க லக்சம்பர்க் நாட்டின் மொத்த நிலப்பரப்பை விட இருமடங்கு நிலத்தை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் சீனாவில் தொழிற்சாலைகள் நடத்தி வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன. இந்த நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்வதற்காகப் பல பகுதிகளில் 4 லட்சத்து 61 ஆயிரம் எக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வணிக அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரம் எக்டேர் நிலமும் இதில் அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒதுக்க உள்ள நிலப்பரப்பு லக்சம்பர்க் நாட்டைவிட இருமடங்காகும் என்பது குறிப்பிடத் தக்கது. நிலம், மின்னாற்றல், தண்ணீர், சாலை வசதி ஆகியவற்றை வழங்குவது வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய ஈர்க்கும் எனக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments