உயர் அதிகாரிகள் இன்று பணிக்குத் திரும்ப தலைமை நீதிபதி உத்தரவு

0 1870

உச்ச நீதிமன்ற உயர் அதிகாரிகள் இன்று முதல் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக  உச்சநீதிமன்ற செயலாளர் சஞ்சீவ் கல்கோன்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற துணைப் பதிவாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலையிலான அதிகாரிகள் அனைவரும் திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்பவேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்  மற்ற ஊழியர்கள் அனைவரும், வீட்டிலிருந்தபடியே பணியைத் தொடரலாம் எனவும் அதில் தெரிவித்துள்ளார். இவ்வாறு பணிக்குத் திரும்பும் அனைத்து ஊழியர்களும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அவ்வப்போது பிறப்பிக்கப்படும் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments