கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என வெளியான செய்தி தவறு - விஜயபாஸ்கர்

0 2368
சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு தேவையான அளவு படுக்கை வசதிகள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நோயாளிகளுக்கு சென்னையில் போதிய படுக்கை வசதி இல்லை என வெளியாகி இருந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்தார்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மருந்து, மாத்திரைகள் மற்றும் கருவிகள் உட்பட தேவை யான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments