தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு மின்சாரம் கிடைக்க பிரதமர் மோடி உத்தரவு

0 1163

ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்குத் தடையற்ற மின்விநியோகம் செய்யுமாறு மின்துறையினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

தனியார் முதலீடுகளை இத்துறைக்குப் பயன்படுத்துவதும் அவசியம் என்று மோடி அப்போது தெரிவித்தார்.  நுகர்வோருக்கு எந்தவித மின்தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் இருபத்து நான்குமணி நேரமும் பணியாற்றும்படி அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட் 19 நோயினால் மின்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,  தேவைகள் குறித்து அத்துறையினருடன் ஆலோசித்த அவர் மின்துறையில் அரசு-தனியார் முதலீட்டுத் திட்டங்களையும் குறித்து விவாதித்தார். இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments