மும்பை தாராவி பகுதியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி

0 3443
மும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா நோய்க்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா நோய்க்கு  ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.

அங்கு ஏற்கெனவே 14 பேர் கொரோனாவால் பலியாகியிருந்தனர். இந்நிலையில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர், இதேபோல் தாராவியை சேர்ந்த மேலும் 42 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளது.

இதனால் தாராவியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 330ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments