பூண்டு எண்ணெயில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி

0 9166

பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தி கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ள அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மொகாலியில் உள்ள உயிரித் தொழில்நுட்பத்துறை ஆய்வகம், கொரோனா தொற்றைக் கண்டறிதல், தடுத்தல், குணப்படுத்தல் ஆகியவற்றுக்குப் பயன்படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. வேதியியல், வேதிப் பொறியியல், உயிரித் தொழில்நுட்பம், மூலக்கூறு உயிரியல், ஊட்டச்சத்து, நானோ தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் விரிவான ஆராய்ச்சிப் பின்புலம் கொண்ட அறிவியலாளர்களின் திறமையைப் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியின் கீழ், பழங்களின் தோல் மற்றும் விதைகளில் இருந்து மதிப்பு மிக்க மருத்துவக் கூறுகளைப் பிரித்தெடுக்கும் வாய்ப்புகளைக் கண்டறியவும், இயற்கையான பூண்டு எண்ணெயைப் பயன்படுத்திக் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் ஏசிஇ 2 என்னும் புரதத் தடுப்பை உருவாக்கவும் இந்த ஆராய்ச்சி உதவும் என மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments