இந்தூரில் கொரோனா பாதிப்பு 20 நாள்களில் பல மடங்கு அதிகரிப்பு

0 2885
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 20 நாள்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4லிருந்து 900ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நடமாட்டத்துக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தூரில் ஊரடங்கை பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையிலானோர் வெளியே நடமாடியபடி உள்ளனர்.

இதனால் கடந்த 20 நாள்களுக்கு முன்பு 4ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 900ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு மக்கள் ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருக்காமல் சுற்றி திரிந்ததும், மக்களிடம் கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை அரசு நிர்வாகம் சரியான முறையில் மேற்கொள்ளாதது போன்றவையே காரணமென்று இந்தூரில் அண்மையில் ஆய்வு நடத்திய மத்திய குழு கண்டுபிடித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments