மருத்துவர்கள் தாக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் -இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

0 1844
மருத்துவர்கள், மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்

கொரோனா சிகிச்சையில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று IMA எனப்படும் இந்திய மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காக வரும் 23 ஆம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்கவும் IMA தீர்மானித்துள்ளது. அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் கவரும் நோக்கில் வரும் 22 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மருத்துவமனைகளில் மெழுகுவர்த்திகள் ஏந்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments