மும்பை தாராவியில் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் போராடும் மாநகராட்சி

0 2514

தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மும்பை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துப் போராடி வருகிறது. மும்பை மாநகரில் மட்டும் கொரோனா வைரசால் இரண்டாயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பயனின்றி 112 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்தக் கொரோனா நோயாளிகளில் 15 விழுக்காட்டினர் மும்பையில் மட்டும் உள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று அழைக்கப்படும் தாராவியில் 5 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு இடத்துக்குள் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

குறுகிய தெருக்கள், நெருக்கமான குடியிருப்புகள், மக்கள் நெரிசல் மிகுந்த கடைவீதிகளைக் கொண்ட தாராவியில் கொரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கூட்டமாக நடமாடும் மக்களில் யாராவது ஒருவருக்குக் கொரோனா இருந்தால் அது ஏராளமானோருக்குப் பரவும் அபாயம் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments