ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன் யார்?

0 6100
ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன்களாக தோனி, ரோகித் சர்மா தேர்வு

ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன்களாக தோனி மற்றும் ரோகித் சர்மா இணைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் அறிமுகமாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்கள் குறித்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவன நடுவர் குழு, கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்டோருடன் அலசி ஆராய்ந்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை அணிக்கு 3 முறை கோப்பை வென்று தந்த தோனி மற்றும் மும்பை அணிக்கு 4 முறை கோப்பை வென்று தந்த ரோகித் சர்மா ஆகிய இருவரும் சிறந்த கேப்டன்களாக இணைந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த பேட்ஸ்மேனாக டி வில்லியர்சும், சிறந்த பந்து வீச்சாளராக மலிங்காவும், சிறந்த ஆல்- ரவுண்டராக ஷேன் வாட்சனும் தேர்வாகியுள்ளனர்.

ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலி சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments