45000 கைதிகளை விடுவிக்க துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல்

0 1064

துருக்கியின் சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தை தொடர்ந்து சுமார் 45 ஆயிரம் கைதிகளை விடுவிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான மசோதாவை அதிபர் தையீப் எர்டோகன் தாக்கல் செய்தார்.

மசோதாவுக்கு ஆதரவாக 279 எம்.பி.க்களும், எதிராக 51 பேரும் வாக்களித்தனர். அதே சமயம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் திறந்தவெளி சிறைச்சாலைகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்களில் 3 பேர் இறந்துள்ளனர். கடந்த 2016 ல் அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கனோர் அடைக்கப்பட்டுள்ளதால் துருக்கியில் உள்ள 355 சிறைகளும் நிரம்பி வழிந்து உச்சகட்ட கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments