கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

0 2416

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2 நிறை மாத கர்ப்பிணி பெண்கள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 60 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த 3 மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அதில் அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில், நோய் தொற்று இருந்தாலும் தாய், சேயும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் குழந்தைக்கு தொற்று பரவியுள்ளதா என்பது 3 வாரங்களுக்கு பின்னரே தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments