சென்னையில் நேரக்கட்டுபாடுகளுடன் பேக்கரிகள் இயங்க அனுமதி

0 2025

சென்னையில் அனைத்து பேக்கரி கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம், என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், கொரோனா முன்னெச்சரிக்கையாக பேக்கரி ஊழியர்கள் மாஸ்க், கையுறை அணிவதோடு சானிடைஸர்களை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், பேக்கரியில் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு தேவையான ரொட்டி, ரஸ்க், பிஸ்கட் போன்றவை அவசியம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பாக்கெட் பொருட்களான பிஸ்கெட், பால் பவுடர் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments