சென்னையில் 156 பேருக்கு கொரோனா உறுதி !

0 4152

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் தவிர்த்து, 13 மண்டலங்களில் மொத்தம் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க. நகர் மண்டலத்தில் 22 பேருக்கும் அண்ணா நகர் மண்டலத்தில் 19 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 13 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பெருங்குடி மண்டலத்தில் 5 பேருக்கும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 4 பேருக்கும், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆனால் தற்போது சென்னையில் உள்ள 6 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments