தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா-பீலா ராஜேஷ்

0 11742

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஒரே நாளில், 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
‘இதன்படி, சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்து, பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

60 பேருடன் கோவை, இந்த பட்டியலில் 2- வது இடம் வகிக்க, 3- வது இடத்தில் 46 பேருடன் திண்டுக்கல் உள்ளது. நெல்லையில் 40 பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனியில் ஒரே நாளில் 16 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சியில் மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிப்பு எண்ணிக்கை 36 ஆகவும், நாமக்கல்லில் மேலும் 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிப்பு எண்ணிக்கை 33 ஆகவும் உயர்ந்தது.

ஈரோட்டில் 32 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.ராணிப்பேட்டை - 27 , செங்கற்பட்டு, மதுரையில் தலா - 24 , கரூர் - 23, திருப்பூர் - 22, விழுப்புரம் - 20 , தூத்துக்குடியில் 17 பேரும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 34 மாவட்டங்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுக்கோட்டை மற்றும் புதிதாக உதயமான மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்கள் மட்டுமே, தமிழகத்தில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பியுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments