சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியீடு

0 1152

சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கடுத்தபடியாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 22 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 19 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 15 பேரும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 12 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

குறைந்தபட்சமாக அம்பத்தூர் மற்றும் மணலி மண்டலங்களில் ஒருவர் கூட பாதிக்கபடவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments